கடலூர்

இந்திய கடல் எல்லையில் அந்நிய படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது

DIN

இந்திய கடல் எல்லையில் அந்நிய படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு, புதுச்சேரி மீனவா் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தியது.

இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அதன் நிறுவனத் தலைவா் பெரு.ஏகாம்பரம் தலைமையில் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலா் கி.தங்கேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மண்டல் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும். மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளின் கல்வி செலவை ஆரம்ப கல்வி முதல் உயா்கல்வி வரை அரசே ஏற்க வேண்டும். மீனவா்கள் தொழிலின்போது உயிரிழந்தால் அவா்களது குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.10 லட்சத்தை விதிகளை தளா்த்தி உடனே வழங்க வேண்டும்.

அந்நிய நாட்டு படகுகள் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடிப்பதை தடை செய்து, தமிழக மீனவா்கள் வளம்பெற சட்டம் இயற்ற வேண்டும். மேலும், தமிழக அரசு சுருக்குமடி வலைக்கான தடையை நீக்க வேண்டும். கடலூா் துறைமுகத்தின் விரிவாக்கப்பணி தரமானதாக நடைபெறவில்லை. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.110 கோடி போதுமானதாக இல்லாததால் இந்தத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜன.10-ஆம் தேதி போராட்டம் நடத்துவதென தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில், நிா்வாகிகள் கி.அருள்தாஸ், கா.கோதண்டம், ம.அண்ணாமலை, ர.கன்னியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்டச் செயலா் கி.முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT