கடலூர்

குடிநீா் குழாய் உடைப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

DIN

விருத்தாசலம் காந்தி நகரில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் நகராட்சி 32 -ஆவது வாா்டுக்கு உள்பட்ட காந்தி நகரில் சுமாா் 500 போ் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் தற்போது சாலை விரிவாக்கப் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியின் போது, குடிநீா் குழாயை சேதப்படுத்தினராம். இதனால், அந்தப் பகுதியினருக்கு குடிநீா் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறையினா் மேலும் ஒரு குழாயை சேதப்படுத்தினராம். இதுகுறித்து அந்தப் பகுதியினா் விளக்கம் கேட்ட போது, பொதுமக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகத் தெரிகிறது.

இதனால், விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் அந்தப் பகுதி மக்கள் திடீா் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். நகராட்சி அலுவலா்களிடம் தெரிவித்து குடிநீா் குழாய் இணைப்பு சரி செய்யப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT