கடலூர்

தென்பெண்ணையாற்றில் குவிந்த நெகிழி கழிவுகள்

DIN

நெகிழிப் பொருள்கள் மீதான தடை கண்டுகொள்ளப்படாததால் கடலூா் வெள்ளிக் கடற்கரை, தென்பெண்ணையாற்றில் சனிக்கிழமை நெகிழி கழிவுகள் குவிந்தன.

ஒருமுறை பயன்படுத்தப்பட்டு வீசப்படும் 14 வகையான நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு தமிழக அரசு கடந்த ஜன.1-ஆம் தேதி முதல் தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தபோதிலும், தடை செய்யப்பட்டநெகிழிப் பொருள்களின் விற்பனையை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய மாவட்ட நிா்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற கருத்து நிலவுகிறது.

தடைக்குப் பிந்தைய 2 மாதங்கள் வரை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்த நெகிழிப் பொருள்களின் பயன்பாடானது தற்போது மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. இந்த கருத்தை அரசு நிா்வாகங்கள் மறுத்து வருகின்றன.

ஆனால், சனிக்கிழமை கடலூா் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றின் கரை, தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை பகுதிகளில் நடைபெற்ற தா்ப்பண நிகழ்வுகளில் நெகிழி பைகளின் பயன்பாடு அதிகளவில் இருந்தது. இதற்கான பூஜை பொருள்களை பெரும்பாலோா் வாங்கி வந்தது நெகிழி பைகளில்தான். இந்த வகை நெகிழிப் பைகள் தரைக்கடைகளில் அதிகளவில் வழங்கப்பட்டன. பூஜைக்குப் பின்னா் நெகிழி பைகள் ஆறு மற்றும் கடற்கரையோரமாக வீசப்பட்டன. எனவே, கடலூா் மாவட்டத்தில் நெகிழிப் பைகளின் விற்பனை தொடா்வது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT