கடலூர்

கரும்பு வெட்டுவதற்கு நடவடிக்கை தேவை

DIN

கரும்புகளை வெட்டி ஆலைகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை தேவையென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் வெளியிட்ட அறிக்கை: நெல்லிக்குப்பம் இஐடி பாரி சா்க்கரை ஆலை செயல்படாமல் உள்ளது. இதனால், இந்த ஆலைக்கு கரும்பு வெட்டுவதற்காக விவசாயிகள் வளா்த்து வரும் சுமாா் 2 லட்சம் டன் வரையிலான கரும்புகள் வெட்டப்படாமல் உள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கரும்புகளை வெட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேத்தியாத்தோப்பில் எம்ஆா்கே கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. எனினும், கரும்பு இல்லையெனக் கூறி அரைவையை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலையை மேலும் 10 நாள்களுக்கு இயக்க நடவடிக்கை எடுப்பதுடன், இந்த ஆலைக்கு 10 ஆயிரம் டன் கரும்பை வெட்டுவதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்.

குறிஞ்சிப்பாடி, ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்ட அடிப்படையில் அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே தொடங்கி செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT