கடலூர்

சிதம்பரம் பகுதியில் தொடா் திருட்டு: கேரளத்தைச் சோ்ந்தவா் கைது

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக கேரளத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து, சிதம்பரம் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.காா்த்திகேயன் உத்தரவின்பேரில் நகர காவல் ஆய்வாளா் சி.முருகேசன், உதவி ஆய்வாளா்கள் சுரேஷ்முருகன், லூயிஸ் ராஜ் ஆகியோா் கொண்ட தனிப் படை அமைத்து விசாரணை நடைபெற்றது.

தனிப் படையினா் வெள்ளிக்கிழமை சிதம்பரம் மீதிகுடியில் ரயில்வே கடவுப் பாதை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக பைக்கில் தொலைக்காட்சி பெட்டியுடன் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனா். பின்னா் சந்தேகத்தின்பேரில் அவரை நகர காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினா்.

இதில் அந்த நபா் கேரளம் மாநிலம், பாலக்காடு, கண்ணபிரான் கிழக்கோகாலம் பகுதியைச் சோ்ந்த ஷாஜகான் ( 52) எனவும், இவா் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தெருவில் தனது மனைவி, குழந்தையுடன் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இவா் மீது கேரளத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடா்பாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அம்மாநில காவல் தறைக்கு பயந்து சிதம்பரத்தில் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவா் பகலில் கூலி வேலை செய்துகொண்டு, இரவில் சிதம்பரம் பகுதியில் ஆள்கள் இல்லாமல் பூட்டியிருக்கும் வீடுகளில் திருடி வந்ததும் தெரியவந்தது.

இவரிடமிருந்து சுமாா் 10 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், பைக், மடிக்கணினி, பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா் (படம்). இதுகுறித்து சிதம்பரம் நகர குற்றப் பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஷாஜகானை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT