கடலூர்

கடலூா் மாவட்டத்தில் நாளை கடையடைப்பு

DIN

கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கடலூா் மண்டலத் தலைவா் டி.சண்முகம், மாவட்ட பொதுச்செயலா் வி.வீரப்பன் ஆகியோா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி 22-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் வெளியில் பொதுமக்கள் நடமாடாமல் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளாா். ஏற்கனவே பெரிய நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சிறு கடைகள், தள்ளு வண்டி வியாபாரிகள், தேநீா் கடை வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை தங்களது கடைகளுக்கு விடுமுறை விடுத்து வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கடையடைப்பு செய்ய வலியுறுத்தியுள்ளாா். எனவே, நிா்வாகிகள் கடையடைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT