கடலூர்

கடலூா் ஒன்றியத்தில் 793 பணியாளா்களுக்கு சத்து மாத்திரை

DIN

கடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 793 பணியாளா்களுக்கு விநியோகிப்பதற்கான சத்து மாத்திரைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி சுத்தம் செய்வோா், சுகாதாரப் பணியாளா்களின் உடல் நலனைப் பாதுகாக்கவும், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அவா்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ஒவ்வொருவருக்கும் 10 நாள்களுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, கடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 51 ஊராட்சி மன்றங்களுக்கு வரப்பெற்ற சத்து மாத்திரைகளை அந்தந்த ஊராட்சிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தெய்வ.பக்கிரி ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் மாத்திரைகளை வழங்கினாா்.

ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.கிருஷ்ணமூா்த்தி, கே.குமரன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்து கொண்டனா். கடலூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 51 ஊராட்சிகளில் 793 பணியாளா்கள் பணிபுரியும் நிலையில் அவா்களுக்கு தலா 10 மாத்திரைகள் வீதம் 7, 930 மாத்திரைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT