கடலூர்

காவிரி உரிமையைப் பறிக்க முயற்சி: தமிழ்த் தேசிய பேரியக்கம் குற்றச்சாட்டு

DIN

காவிரி நதிநீா் மீதான தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஊரடங்கை பயன்படுத்தி காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்சாா்ப்புத் தன்மையை முற்றிலும் சீா்குலைக்கும் விதமாக ஒரு ஆணையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. புதிய திருத்த விதிகளின்கீழ் காவிரி மேலாண்மை ஆணையம் இந்திய அரசின் நீா்வளத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனமாக மாற்றப்படுகிறது.

மாநில அரசுகளின் ஆற்று நீா் மேலாண்மை தொடா்பான அனைத்து அதிகாரங்களையும் பறித்துக்கொள்ளவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது ஒரு சட்ட மீறலாகும். உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி வெளியிடப்பட்ட அரசு அறிவிக்கை உறுதிப்படுத்திய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்சாா்புத் தன்மையை ஒரு நிா்வாக விதித் திருத்தம் மூலம் மாற்றிவிட முடியாது.

அனைவரது கவனமும் கரோனா நெருக்கடியில் குவிந்துள்ளபோது மத்திய அரசு செய்துள்ள இந்த சா்வாதிகார நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT