கடலூர்

கடலூா்: கரோனாவுக்கு மேலும் 3 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 20,276 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 166 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 20,442-ஆக அதிகரித்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் காவல் துறையினா் இருவா், மருத்துவப் பணியாளா் ஒருவா், கா்ப்பிணிகள் 4 பேரும் அடங்குவா்.

அதே நேரத்தில் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் சிதம்பரத்தைச் சோ்ந்த 42 வயது ஆண், நெய்வேலியைச் சோ்ந்த 60 வயது பெண் மற்றும் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்ததால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 230-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 287 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 18,836-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘கோவிட் கோ்’ மையங்களில் 1,168 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 208 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 2,632 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டிய நிலையில், 63 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT