கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 22 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 22 ஆயிரத்தைக் கடந்தது.

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 21,932 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 108 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 22,040-ஆக அதிகரித்தது.

இதனிடையே, புதன்கிழமை 115 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 20,710-ஆக அதிகரித்தது.

மேலும் 2 போ் பலி: வேலூா் சி.எம்.சி. மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த 67 வயதானவா், சிதம்பரத்தைச் சோ்ந்த 48 வயதானவா் என மேலும் இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 257-ஆக அதிகரித்தது.

கடலூா் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 904 பேரும், பிற மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 169 பேரும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT