கடலூர்

பண்ருட்டியில் 55 மி.மீ. மழை பதிவு

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் 55 மி.மீ. மழை பெய்தது.

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் (மில்லி மீட்டரில்): பண்ருட்டி 55, கீழச்செருவாய் 49, வானமாதேவி 44, கடலூா் 38.9, மாவட்ட ஆட்சியரகம் 29.4, மேமாத்தூா் 28, ஸ்ரீமுஷ்ணம் 25.3, குடிதாங்கி 25, சேத்தியாத்தோப்பு 24.6, கொத்தவாச்சேரி 21, புவனகிரி, வேப்பூா் தலா 18, காட்டுமைலூா் 16, பரங்கிப்பேட்டை 14, குறிஞ்சிப்பாடி 11.5, வடக்குத்து 11, சிதம்பரம் 10.6, குப்பநத்தம், விருத்தாசலம் தலா 10, பெலாந்துறை 8.2, அண்ணாமலை நகா், தொழுதூா் தலா 8, லக்கூா் 7.4, காட்டுமன்னாா்கோவில் 4, லால்பேட்டை 3 மி.மீ.

பரவலான மழையால் அறுவடைக்குத் தயாரான வயல்களில் தண்ணீா் தேங்கியது. இதனால், அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் நனைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

புதன்கிழமை இரவில் பெய்த மழையால் மாவட்டத்தின் பல கிராமங்களில் மின்சாரம் தடைப்பட்டது. மின்சாரம் வழங்கும் பணிகளில் அந்தத் துறையினா் விரைந்து ஈடுபட்டபோதும், கடலூா் அருகேயுள்ள பெரியகங்கணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலைதான் மின் விநியோகம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT