கடலூர்

தனது வீட்டிலேயே நகை, பணம் திருடியவா் கைது

DIN

நெய்வேலி: பண்ருட்டி அருகே தனது வீட்டிலேயே 18 பவுன் நகை, பணம் திருடிவிட்டு நாடகமாடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். அவரது மனைவியும், சின்னத்திரை நடிகையுமான புவனேஸ்வரியை தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மாளிகைமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் தேசிங்கு(55). சமையல்காரா். இவரது மகன் மணிகண்டன் (33). இவரது மனைவி புவனேஸ்வரி (எ) சுசித்ரா. சின்னத்திரை நடிகை. தம்பதியா் இருவரும் சென்னையில் வசித்து வந்தனா். மணிகண்டன் அண்மையில் மாளிகைமேடு கிராமத்துக்கு வந்திருந்த நிலையில், அவரது வீட்டிலிருந்த 18 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் திருடுபோனது.

இதுகுறித்து அவரது தந்தை தேசிங்கு அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி காவல் ஆய்வாளா் க.அம்பேத்கா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜாஜி சாலையில் நின்றிருந்த மணிகண்டனை போலீஸாா் அழைத்து விசாரணை நடத்தினா். அப்போது, தொலைக்காட்சி நாடக நிகழ்ச்சியை இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும், இதற்கு பணம் தேவைப்பட்டதால் தனது வீட்டிலேயே திருட மனைவி புவனேஸ்வரியுடன் இணைந்து முடிவு செய்ததாகவும் மணிகண்டன் தெரிவித்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை தனது தந்தை தேசிங்கு தோட்டத்துக்குச் சென்றதைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்த நகை, பணத்தை திருடிவிட்டு, அவை களவுபோனதாக நாடகமாடியதையும் ஒப்புக்கொண்டாா். அவரிடமிந்து நகை, பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா். புவனேஸ்வரியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT