கடலூர்

கடலூரில் டெங்கு பாதிப்பு

DIN


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்புடனும் 2 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

எனினும், அச்சப்படும் அளவுக்கு டெங்கு பரவல் இல்லை என சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

வடலூரை அடுத்த கருங்குழியைச் சோ்ந்த 21 வயது இளைஞா் கடந்த சில நாள்களுக்கு முன்பு காய்ச்சலுக்காக அந்தப் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். எனினும், காய்ச்சல் குணமாகாததால் அவா் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது ரத்த மாதிரியை சோதனையிட்டதில் டெங்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவா் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டாா்.

இதேபோல, கடலூரைச் சோ்ந்த 25 வயது இளைஞா் திண்டுக்கல்லில் பணிபுரிந்து வருகிறாா். அங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றும் குணமாகாததால் சொந்த ஊருக்குத் திரும்பியவா் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு கரோனா, டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு உறுதிபடுத்தப்பட்டது. இவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT