கடலூர்

கிள்ளை பகுதியில் கருகும் நெல் பயிா்கள்: தண்ணீா் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

DIN


சிதம்பரம்: சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் கருகும் நெல் பயிா்களைக் காப்பாற்ற பாசிமுத்தான் ஓடையிலிருந்து

உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் கிள்ளை, குச்சிபாளையம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலனிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் குச்சிபாளையம், கிள்ளை பகுதிகளில் அதிகளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. பயிா்களில் தற்போது கதிா் வரும் நேரத்தில் அவை தண்ணீா் இன்றி அழியும் அபாயத்தில் உள்ளன. எனவே உடனடியாக பாசிமுத்தான் ஓடையிலிருந்து அந்தப் பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும்.

குச்சிபாளையம் தடுப்பணை மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளதால் விளை நிலங்களுக்குள் உவா்நீா் புகுந்துவிடுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க புதிய தடுப்பணை அமைத்துத் தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியா், உடனடியாக தண்ணீா் திறந்துவிடவும், தடுப்பணையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT