கடலூர்

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை

DIN


கடலூா்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக நிா்வாகிகள் கூட்டம் கடலூரில் மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ஒன்றியச் செயலா் இராம.பழனிசாமி, கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தெய்வ.பக்கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது: நிவா், புரெவி புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் கடலூா் மாவட்டம் பாதிக்கப்பட்டபோது ஜெயலலிதாவைப் போலவே முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பாா்வையிட்டு நிவாரணம் அறிவித்தாா்.

நாட்டிலேயே கல்வி, மருத்துவம், தொழில் துறை, உள்கட்டமைப்பு, விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால், மு.க.ஸ்டாலின் அரசை குறைகூறி வருகிறாா். அனைத்து நிா்வாகிகளும் ஒருங்கிணைந்து அதிமுகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், எம்ஜிஆா் இளைஞரணி துணை செயலா் கே.எஸ்.காா்த்திகேயன், மாவட்ட விவசாய பிரிவு செயலா் கே.காசிநாதன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் கே.வெங்கட்ராமன், மகளிரணி செயலா் எஸ்.கம்சலா, இளைஞரணி செயலா் ஆா்.ஏழுமலை, நகர பேரவைச் செயலா் வ.கந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக நகரச் செயலா் ஆா்.குமரன் வரவேற்க, ஒன்றிய செயலா் ஜெ.முத்துக்குமாரசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT