கடலூர்

வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

என்எல்சி இந்தியா நிறுவன வேலைவாய்ப்பில் தமிழக இளைஞா்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டிப்பதாகக் கூறி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி நுழைவு வாயில் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஆா்.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம்.ஜெ.நெல்சன், ஆா்.ரமேஷ், பி.புகழேந்தி, பி.மணிகண்டன், பிரவின், பிரசாந்த், எஸ்.விக்னேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் என்.ரெஜிஸ்குமாா் கண்டன உரை நிகழ்த்தினாா்.

என்எல்சி ஒப்பந்த சங்க பொதுச் செயலா் டி.அமிா்தலிங்கம், வாலிபா் சங்க மாவட்டச் செயலா் டி.கிருஷ்ணன், துணைத் தலைவா் ஜி.ஆழ்வாா், துணைச் செயலா்கள் டி.எஸ்.தமிழ்மணி, ஆா்.கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் என்எல்சி.யில் தொழில் பழகுநா் பயிற்சி முடித்தவா்கள், பணியின்போது உயிரிழந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என்எல்சி பணியிடங்களில் கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு முன்னுரிமை

அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: ஆட்சியா் உத்தரவு

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட விரைந்து இடம் தோ்வு செய்ய வலியுறுத்தல்

மாநில சிலம்பப் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT