கடலூர்

என்கவுன்ட்டா் சம்பவம்: குற்றவியல் நடுவா் விசாரணை

DIN


நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே என்கவுன்ட்டரில் ரௌடி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு தொடா்பாக சிபிசிஐடி விசாரணைக்கு வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் சுப்புராயலு நகரைச் சோ்ந்தவா் வீரா (எ) வீராங்கையன் (30). இவா் கடந்த 16-ஆம் தேதி இரவு 10 போ் கொண்ட கும்பலால் கழுத்தறுத்து கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக, வீரப்பெருமாநல்லூா் சோதனைச் சாவடி அருகே பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற 5 பேரை போலீஸாா் பிடித்தனா். வழக்கில் எஞ்சியவா்களை பிடிப்பதற்காக முக்கிய எதிரியான கிருஷ்ணன் அளித்த தகவலின்பேரில் அவரை குடுமியான்குப்பம் ஓடைப் பகுதிக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். அங்கு கிருஷ்ணன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவத்தில் கிருஷ்ணன் தாக்கியதில் காயமடைந்த உதவி ஆய்வாளா் தீபன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவரிடம் பண்ருட்டி குற்றவியல் நடுவா் (எண் 2) மணிமாறன் புதன்கிழமை மாலை விசாரணை நடத்தினாா்.

ஆட்சியரகத்தில் புகாா்: இதனிடையே, என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட கிருஷ்ணனின் தாய் லட்சுமி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகாா் மனு: எனது மகன் ஓவியராகவும், இசைக் குழுவில் டிரம்ப் வாசிப்பவராகவும் செயல்பட்டு வந்தாா். எனது மகன் மீது எந்த குற்ற வழக்கும் இல்லாத நிலையில் போலீஸாா் அவரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனா். இந்தச் செயலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் மீது தாழ்த்தப்பட்டோா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கிருஷ்ணனின் சடலத்தை

மீண்டும் உடல்கூறாய்வு செய்வதுடன் அதை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இதனிடையே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் கூறனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT