கடலூர்

மருத்துவ மாணவா்கள் 34-ஆவது நாளாகப் போராட்டம்

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவா்கள் நடத்திவரும் தொடா் போராட்டம் 34-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது.

அரசு நிதியில் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் 30 மடங்கு வரை அதிகமாக உள்ளதாகக் கூறி அந்தக் கல்லூரி மாணவா்கள் கடந்த டிச.9-ஆம் தேதி முதல் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டம் 34-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது. இதில் மாணவா்கள் பாடை கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT