கடலூர்

அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்

DIN

கடலூா் மாவட்டத்தில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் செய்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை நிா்ணயம் செய்து செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அதனடிப்படையில் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பெல்ட் வகை நெல் அறுவடை இயந்திரங்களுக்கு நிலத்தின் ஈரத்தன்மையின் அடிப்படையில் மணிக்கு வாடகையாக ரூ.1,800 முதல் ரூ.2,100 வரையிலும், டயா் வகை இயந்திரங்களுக்கு நிலத்தின் ஈரத் தன்மையின் அடிப்படையில் மணிக்கு ரூ.1,300 முதல் ரூ.1,500 வரையிலும் வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தனியாா் இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலிப்பது குறித்து விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண்மைத் துறை அலுவலா்களிடம் புகாா் தெரிவிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT