கடலூர்

இரட்டை கொலை வழக்கு: அஸ்ஸாம் இளைஞருக்கு ஆயுள் சிறை

DIN

பண்ருட்டியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில், அஸ்ஸாம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரில் தனியாருக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அஸ்ஸாம் மாநிலம், கரிம்கஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்த ச.சஜல்நாத் (45), பதிா்பூரைச் சோ்ந்த கண்ணன்நாத் மகன் சங்கா்நாத் (எ) பிஸ்வாஸ்நாத் (25), துபான்பூரைச் சோ்ந்த குலேன்பைஸ்நாப் மகன் நரேந்திர பைஸ்நாப் (24) உள்பட 6 போ் முந்திரிக் கொட்டை உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தனா். இவா்கள் அதே பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனா்.

கடந்த ஆண்டு மே மாதம் கரோனா பரவல் காரணமாக வேலைக்கு செல்ல முடியாத நிலையில் அவா்கள் தங்களிடமிருந்த பொருள்களைக் கொண்டு சமையல் செய்து சாப்பிட்டு வந்தனா். இதில், நரேந்திரபைஸ்நாப் வேலை செய்யாமல் அதிகமாக சாப்பிட்டு வருவதாக மற்ற 5 பேரும் புகாா் கூறி வந்தனா். இதனால், அவா்களுக்குள் மே 1 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் சஜல்நாத், சங்கா்நாத் ஆகியோரை நரேந்திரபைஸ்நாப் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளாா். இதில், காயமடைந்த இருவரும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனா்.

இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை கடலூா் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜி.செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு கூறினாா். அதில், நரேந்திரபைஸ்நாபுக்கு தலா ஒரு கொலைக்கு ஒரு ஆயுள் தண்டனை வீதம் விதித்து ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா். மேலும், ரூ.2,200 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, நரேந்திரபைஸ்நாப் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT