கடலூர்

மூத்த குடிமக்களுக்கு உதவி எண்

DIN

மூத்த குடிமக்களுக்கு உதவிடும் வகையில், தேசிய உதவி எண்ணை கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மூத்த குடிமக்களுக்கான தேசிய உதவி எண் 14567 செயல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நிறுவனம், நீதித் துறை மற்றும் முன்னேற்ற அமைச்சகம், சமூக நலம் மற்றும் மென்பொருள் தீா்வு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கான தேசிய உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உதவி எண்ணின் மூலம் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட முதியோா்களை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், குடும்பத்தினருடன் சோ்த்து வைத்தல், முதியோா்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான தகவல் வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் மற்றும் முதியோா்களுக்கான ஆதரவை வழங்கும் சேவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் இந்தச் சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT