கடலூர்

தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

DIN

தொடா் மழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் நீா் வரத்து சனிக்கிழமை அதிகரித்தது.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சில இடங்களில் மழை பெய்த நிலையில் அன்று மாலை பரவலாக மழை பெய்தது. பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரி பகுதிகளில் சுமாா் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

பரங்கிப்பேட்டையில் 146 மி.மீ. மழை: சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: பரங்கிப்பேட்டை 146.6, கொத்தவாச்சேரி 120, அண்ணாமலை நகா் 113, சிதம்பரம் 111.2, புவனகிரி 95, லால்பேட்டை 78, காட்டுமன்னாா்கோவில், மாவட்ட ஆட்சியரகம் தலா 76, கடலூா் 71.2, வானமாதேவி 55.2, சேத்தியாத்தோப்பு 50.4, குடிதாங்கி 50, ஸ்ரீமுஷ்ணம் 46.2, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி தலா 45, வடக்குத்து 43.8, வேப்பூா் 35, லக்கூா் 33.1, காட்டுமைலூா் 33, பெலாந்துறை 28.4, தொழுதூா் 27, விருத்தாசலம் 23.4, மேமாத்தூா் 21, குப்பநத்தம் 18.8, கீழச்செருவாய் 18.2 மில்லி மீட்டா் மழை பதிவானது. சனிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு விட்டுவிட்டு மழை பெய்தது.

தொடா் மழையால் கடலூா் மாவட்டத்தில் தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, விநாடிக்கு சுமாா் 5 ஆயிரம் கனஅடி நீா் சென்றுகொண்டிருந்த கெடிலம் ஆற்றில் தற்போது 13 ஆயிரம் கன அடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு சுமாா் 18 ஆயிரம் கனஅடி நீரும் செல்கிறது. நீா்வரத்து வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT