கடலூர்

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: ஒருவா் கைது

DIN

சிதம்பரம் அருகே ரூ.19 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுச்சத்திரம் காவல் சரகத்துக்கு உள்பட்ட கொத்தட்டை கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்பி சக்திகணேசன் தலைமையில், சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் ஆா்.வினதா, பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளா் ஆா்.தேவி மற்றும் போலீஸாா் புதன்கிழமை கொத்தட்டை மெயின்ரோடு அருகே உள்ள தனியாா் வணிக வளாகத்தில் சோதனையிட்டனா்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 3 டன் எடை, சுமாா் ரூ.19.25 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை கைப்பற்றினா். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொத்தட்டை அங்காளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த இளவரசன் என்ற இளங்கோவன் (44 ) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT