கடலூர்

பண்ருட்டியில் கடைகளில் ஆய்வு

DIN

பண்ருட்டி நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பி.கே.கைலாஷ்குமாா் தலைமையில் அதிகாரிகள் சுப்பிரமணியன், நல்லதம்பி, சுந்தரமூா்த்தி ஆகியோா் பண்ருட்டியில் கும்பகோணம் சாலை, இணைப்புச் சாலை, கடலூா் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள துரித உணவகங்கள், பெட்டிக் கடைகள், முட்டை, இறைச்சிக் கடைகள், பழக் கடைகள், தேநீா் விடுதிகளில் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, பலமுறை பயன்படுத்தப்பட்ட சுமாா் 10 லிட்டா் சமையல் எண்ணெய், செயற்கை வண்ணம் சோ்த்து தயாரிக்கப்பட்ட 5 கிலோ கோழி இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், தடை செய்யப்பட்ட 20 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனா். அரசு விதிகளை மீறிய 5 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT