கடலூர்

என்எல்சி ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

DIN

என்எல்சி ஊழியா் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 29-இல் வசித்து வந்தவா் ரமேஷ் (54). என்எல்சி இந்தியா நிறுவன மத்திய சேமிப்புக் கிடங்கில் சொசைட்டி ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் திங்கள்கிழமை வழக்கம்போல பணிக்குச் சென்றாா். சுதந்திர தினத்தையொட்டி பணியிடத்தில் தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினா். அப்போது அங்கிருந்த ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், ரமேஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவரது உடல் என்எல்சி பொது மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொ்மல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த ரமேஷுக்கு பரிமளா (50) என்ற மனைவியும், ரம்யா (22) என்ற மகளும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT