கடலூர்

ஊதிய முரண்பாட்டை களைய ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்

DIN

இடைநிலை ஆசிரியா்களிடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது.

இந்த அமைப்பின் குறிஞ்சிப்பாடி வட்டாரக் கிளை செயற்குழுக் கூட்டம் வடலூா் அரசு மகளிா் பள்ளி வளாகத்தில் வடலூா் கல்வி மாவட்ட தலைவா் கனகராசு தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கடலூா் மாவட்ட மகளிரணிச் செயலா் செல்வி, வடலூா் கல்வி மாவட்டச் செயலா் அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரப் பொருளாளா் சரவணன் வரவேற்றாா். செயலா் வசந்தி பேசினாா்.

கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியா்களிடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் 2.37 லட்சம் போ் பயன்

நாடாளுமன்ற வளாகத்தில் நிறைவடையாத சீரமைப்புப் பணிகள்: புதிய எம்.பி.க்களுக்கு இணைப்புக் கட்டடத்தில் வரவேற்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

மக்களவை 5-ஆம் கட்ட தோ்தல்: ரேபரேலி உள்பட 49 தொகுதிகளில் இன்று பிரசாரம் நிறைவு

நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தாா் ஸ்வாதி மாலிவால்

SCROLL FOR NEXT