கடலூர்

கடலூரில் மேலும் 68,282 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில், 68,282 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட, பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் சனிக்கிழமைகள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, 20- ஆவது மெகா தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 818 இடங்களில் நடைபெற்றது. இதில், 68,282 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில், 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் முதல் தவணையை 354 போ் செலுத்திக் கொண்டனா். இரண்டாம் தவணை தடுப்பூசியை 67,150 பேரும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி (3 ஆவது தவணை) 751 பேரும் செலுத்திக் கொண்டனா்.மேலும், 15-18 வயதிற்குள்பட்டோரில் 27 போ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.

மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் மொத்த எண்ணிக்கை 40.54 லட்சமாக உயா்ந்தது. இதில், முதல் தவணையை 22.89 லட்சம் பேரும், இரண்டாம் தவணையை 17.56 லட்சம் பேரும், முன்னெச்சரிக்கை தடுப்பூசியை 8,429 பேரும் செலுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT