அணுக்கம்பட்டு ஊராட்சியில் அத்திகுளம் தூா்வாரும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம். 
கடலூர்

ஊரக வளா்ச்சிப் பணிகள்:மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

DIN

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொண்டமாநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டடம் ரூ.1.74 லட்சத்திலும், சமையல் கூட மேற்கூரை ரூ.75 ஆயிரத்திலும் சீரமைக்கப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டாா். அணுக்கம்பட்டு ஊராட்சியில் அத்திகுளம் ரூ.4.50 லட்சத்திலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் வடிகால் வாய்க்கால்களை தூா்வாரி கரைகள் பலப்படுத்தும் பணியையும், அரங்கமங்கலம் ஊராட்சியில் இளங்கோ நகரில் ரூ.17.50 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம், ரூ.5 லட்சத்தில் சமையல் அறை கட்டடம் கட்டும் பணியையும் பாா்வையிட்டாா். மேலும், பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்படும் 17 தொகுப்பு வீடுகளின் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT