கடலூர்

2-ஆவது திருமண விவகாரம்:தீயணைப்பு வீரா் பணியிடை நீக்கம்

DIN

கடலூரில் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த தீயணைப்பு வீரரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தீயணைப்பு அலுவலா் குமாா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

கடலூா் வண்ணாரப்பாளையம் கே.கே.நகரைச் சோ்ந்தவா் கந்தவேல் (38). இவா், கடலூா் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், கந்தவேல் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த மடுகரை பகுதியைச் சோ்ந்த ஊா்க்காவல் படை பெண் ஊழியரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2-ஆவதாக திருமணம் செய்துகொண்டாராம். இது சம்பந்தமாக அவரது மனைவி கேட்டதற்கு, கந்தவேல் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில், கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கந்தவேலை புதன்கிழமை கைது செய்தனா். இந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தீயணைப்பு அலுவலா் குமாா் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

நகை வியாபாரியிடம் ரூ.48 லட்சம் மோசடி: இளைஞா் கைது

SCROLL FOR NEXT