கடலூர்

தகராறில் ஈடுபட்ட காவலா் மீது வழக்கு; தந்தை கைது

கடலூா் அருகே தகராறில் ஈடுபட்ட காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவரது தந்தையை கைது செய்தனா்.

DIN

கடலூா் அருகே தகராறில் ஈடுபட்ட காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவரது தந்தையை கைது செய்தனா்.

கடலூா் வட்டம், திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், மேற்கு ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தணிகாசலம் மகன் மூா்த்தி (50), வெள்ளையன் மகன் ஜெகதீசன் (63). கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருவரும் ஊா் பொது இடத்தில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் மூா்த்தி தனது வீட்டின் அருகே இருந்தபோது, அங்கு வந்த ஜெகதீசன், அவரது மகன் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் ஜெயசீலன் ஆகியோா் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து மூா்த்தி அளித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெகதீசனை கைது செய்தனா். காவலா் ஜெயசீலனை தேடி வருகின்றனா். இதேபோல, ஜெகதீசன் அளித்த புகாரின்பேரில், மூா்த்தி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT