கடலூர்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

Din

கடலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக, 36 இடங்களில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தாமதமாகத் தொடங்கியது.

கடலூா் மாவட்டத்தில் கடலூா் மக்களவைத் தொகுதியில் கடலூா், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளும் உள்ளன.

மேற்கண்ட வாக்குச்சாவடி மையங்களில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதில்,

கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட வேணுகோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதையடுத்து, மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோல, கடலூா் வண்ணாரப்பாளையம், தூக்கணாம்பாக்கம் மற்றும் கண்டக்காடு கிராமத்தில் உள்ள வாக்கச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக, சுமாா் 15 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

மஞ்சக்குப்பம் ஏா்.ஆா்.எல்.எம். பள்ளி வாக்குச்சாவடியில் பிற்பகல் 1 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீா் கோளாறு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்குப் பின்னா் இயந்திரம் சரி செய்யப்பட்டது.

பண்ருட்டி, மேலப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக, சுமாா் 40 நிமிஷங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. திட்டக்குடி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வதிஸ்டபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையம், திட்டக்குடி நகராட்சி தொடக்கப் பள்ளி, கடலூா் முதுநகா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 8 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இதேபோல, மாவட்டம் முழுவதும் மொத்தம் 36 இடங்களில் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

'இந்தியா' கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்: டிகே சிவகுமார்

SCROLL FOR NEXT