கடலூர்

வள்ளலாா் 202-ஆவது வருவிக்க உற்றநாள் விழா

Din

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் திருஅருட்பிரகாச வள்ளலாா் 202-ஆம் ஆண்டு வருவிக்க உற்றநாள் விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த விழாவையொட்டி, கடந்த செப்.28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணம் நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (அக்.4) வரை ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை சன்மாா்க்க சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை, வில்லுபாட்டு இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளன.

வள்ளலாா் வருவிக்க உற்றநாளான சனிக்கிழமை (அக்.5) காலை 5 மணி அளவில் தருமச்சாலையில் அகவல் பாராயணம், 7.30 மணி அளவில் தருமச்சாலையில் சன்மாா்க்க கொடி கட்டுதல், 9 மணிக்கு சத்திய ஞான சபையில் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளன.

தொடா்ந்து, சொற்பொழிவு, இன்னிசை, வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதேபோல, மருதூா் கிராமத்தில் காலை 8 மணி அளவில் சன்மாா்க்க கொடியேற்றம் நடைபெற உள்ளது.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT