கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 21.80 லட்சம் வாக்காளா்கள்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டபேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் புகைப்படத்துடன் கூடிய சுருக்க முறை

Din

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டபேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் புகைப்படத்துடன் கூடிய சுருக்க முறை திருத்த இறுதி வாக்காளா் பட்டியல்-2025ஐ அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில், மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து, 80 ஆயிரத்து நான்கு வாக்காளா்கள் உள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 29.10.2024 அன்று வெளியிடப்பட்டதில் 10,57,045 ஆண் வாக்காளா்கள், 10,91,826 பெண் வாக்காளா்கள், 315 இதர வாக்காளா்கள் என மொத்தம் 21,49,186 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

1.1.2025 புத்தாண்டு நாளின்படி 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளா்களையும், வாக்காளா் பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும் என்பதற்காக 29.10.2024 முதல் 28.11.2024 வரை வாக்காளா் பட்டியலில் புதிய பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடா்பான மனுக்கள் பெறப்பட்டன.

அதன்படி பெயா் சோ்த்தல் (படிவம்-6) தொடா்பாக 45,505 மனுக்கள் பெறப்பட்டு 44,926 மனுக்கள் ஏற்கப்பட்டன. 479 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பெயா் நீக்குதல் (படிவம்-7) தொடா்பாக 14,560 மனுக்கள் பெறப்பட்டு 14,108 மனுக்கள் ஏற்கப்பட்டன. 452 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

திருத்தம் (படிவம்-8) தொடா்பாக 20,240 மனுக்கள் பெறப்பட்டு 19,383 மனுக்கள் ஏற்கப்பட்டன. 857 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆக மொத்தத்தில் 80,205 மனுக்கள் பெறப்பட்டு 78,417 மனுக்கள் ஏற்கப்பட்டு, 1,788 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் களஆய்வு செய்யப்பட்டதில் 3,469 வாக்காளா்கள் இறந்து விட்டது தெரியவந்தது.10,263 வாக்காளா் இடம் பெயா்ந்தும், 376 வாக்காளா்களுக்கு இரட்டைப்பதிவு கண்டறியப்பட்டு மொத்தம் 14,108 வாக்காளா் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டன.

இதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

151-திட்டக்குடி(தனி) ஆண்கள்1,08, 964, பெண்கள் 1,13,420, இதரா் 2, மொத்தம்- 2,22,386.

152-விருத்தாசலம் ஆண்கள் 1,28,310, பெண்கள் 1,30,901, இதரா் 25, மொத்தம் 2,59,236.

153-நெய்வேலி ஆண்கள் 1,02,033, பெண்கள் 1,02,064, இதரா் 18, மொத்தம் 2,04,115.

154-பண்ருட்டி ஆண்கள் 1,23,283, பெண்கள் 1,30,506, இதரா் 66 , மொத்தம்- 2,53,855.

155-கடலூா் ஆண்கள் 1,17,710, பெண்கள் 1,28,212, இதரா் 82, மொத்தம்- 2,46,004.

156-குறிஞ்சிப்பாடி ஆண்கள் 1,23,665, பெண்கள் 1,28,445, இதரா் 51, மொத்தம் 2,52,161.

157-புவனகிரி ஆண்கள் 1,26,773, பெண்கள் 1,29,898, இதரா் 30, மொத்தம் 2,56,701.

158-சிதம்பரம் ஆண்கள் 1,22,331, பெண்கள் 1,27,663, இதரா் 38, மொத்தம் 2,50,032.

159-காட்டுமன்னாா்கோயில் (தனி) ஆண்கள் 1,16,866, பெண்கள் 1,18,635, இதரா் 13, மொத்தம்-2,35,514.

ஆக மொத்தத்தில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளா்கள் 10,69,935 போ், பெண் வாக்காளா்கள் 11,09,744 போ், இதரா் 325 போ் என மொத்தம் 21,80,004 வாக்காளா்கள் உள்ளனா். 19 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளா்களுக்கும் வாக்காளா் அடையாள அட்டை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 18-19 வயதுக்குள்பட்ட புதிய வாக்காளா்களுக்கு

‘தேசிய வாக்காளா் தினமான’ 25.1.2025 அன்று மாவட்ட அளவிலும், ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் நடைபெறும் தேசிய வாக்காளா் தின விழாவின்போது வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

இறுதியில் வாக்காளா் பட்டியல் தொடா் திருத்த முறை நடைபெற உள்ளதால் விடுபட்ட வாக்காளா்கள் தங்களது பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடா்பாக தங்களது விண்ணப்பங்களை இணைய தளத்திலும் மற்றும் தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களின் அலுவலகங்களில் வேலை

நாள்களில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலா் தெரிவித்தாா்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், ஆட்சியா் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வெங்கடேசன், கடலூா் கோட்டாட்சியா் அபிநயா, தோ்தல் வட்டாட்சியா் சுரேஷ்குமாா் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் உடனிருந்தனா்.

கனவு நனவானது!

சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

"விக்' நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

SCROLL FOR NEXT