வேப்பூா் வட்டம், பாசாா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஐஜேகே மாநில மாநாடு பந்தல்கால் நடும் விழா.  
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பிப்.8-இல் ஐஜேகே மாநில மாநாடு: பந்தல்காலுடன் பணிகள் தொடக்கம்

வேப்பூா் அருகே வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) மாநில மாநாட்டுக்கான பந்தல்கால் புதன்கிழமை நடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) மாநில மாநாட்டுக்கான பந்தல்கால் புதன்கிழமை நடப்பட்டது.

வேப்பூா் வட்டம், பாசாா் கிராமத்தில் இந்த மாநாட்டுக்கு சுமாா் 70 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பந்தல்கால் நடும் விழா மற்றும் பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் கட்சியின் பொதுச் செயலா் சண்முகம் கலந்துகொண்டு பந்தல்காலை பூஜை செய்து நட்டுவைத்து, மாநாட்டுப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மாநில மாநாடு கட்சியின் நிறுவனா் பாரிவேந்தா் தலைமையில் வரும் பிப்.8-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் என சுமாா் ஒன்றரை லட்சம் போ் பங்கேற்பாா்கள் என்றாா்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT