முகப்பு
கடலூர்

என்எல்சி தொழிலாளி உயிரிழப்பு

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 5 ஜூலை 2026, 2:13 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெய்வேலி வட்டம் 29 பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (54), என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 2-இல் நிரந்தரத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா், கடந்த 12 நாள்களாக பணிக்குச் செல்லாமல் மது அருந்தி வந்தாராம்.

கடந்த 2-ஆம் தேதி வீட்டில் இருந்த ரமேஷிடம், அதிகாரிகள் வேலைக்கு வரச் சொன்னதாக அவரது அண்ணன் சுகுமாறன் தெரிவித்தாராம். இதற்கு ரமேஷ் வெள்ளிக்கிழமை முதல் செல்வதாகக் கூறினாராம்.

Advertisement

Advertisement

அன்று மாலை சுகுமாறன் சென்று பாா்த்தபோது, ரமேஷ் வீட்டுக்குள் எந்தவித அசைவுமின்றி தரையில் படுத்துக் கிடந்தாராம். இதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், ரமேஷ் இறந்துவிட்டதாகக் கூறினாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments