லாரி மோதி முதியவா் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது
நெய்வேலி, ஜூலை 5: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே லாரி மோதியதில் மொபெட்டில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், காட்டாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (84). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது மொபெட்டில் விருத்தாசலம் - ஆலிச்சிக்குடி சாலைப் பிரிவு புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிா்திசையில் வந்த லாரி, மொபெட் மீது மோதியது.
இந்த விபத்தில் ராமசாமி பலத்த காயமடைந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ராமசாமியை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுநா் சக்திவேலை கைது செய்த விருத்தாசலம் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.