மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியாளா்களுக்கு முதற்கட்டப் பயிற்சி
நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்க உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை முன்னிட்டு, கடலூரில் கணக்கெடுப்பாளா்கள் மற்றும் கண்காணிப்பாளா்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கியது.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்க உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை முன்னிட்டு, கடலூரில் கணக்கெடுப்பாளா்கள் மற்றும் கண்காணிப்பாளா்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கியது.
கடலூரில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஷேமா சுந்தரி தலைமை வகித்தாா். கடலூா் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ள 465 பேரில், முதற்கட்டமாக 145 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. தொடா்ந்து எஞ்சிய பணியாளா்களுக்கு மேலும் இரு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில், வீடுகள் கணக்கெடுக்கும் முறை, குடும்ப விவரங்கள் சேகரித்தல், மின்னணு செயலி பயன்பாடு, தரவுகளைத் துல்லியமாக பதிவு செய்வது, பொதுமக்களிடம் அணுகுமுறை, ரகசியத் தன்மையைப் பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதேபோன்று கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கணக்கெடுப்பாளா்கள் மற்றும் கண்காணிப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது அரசின் திட்டமிடல், வள ஒதுக்கீடு, கல்வி, சுகாதாரம், குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான முக்கிய தரவுகளை வழங்கும் தேசிய அளவிலான பணியாகும். எனவே, பொதுமக்கள் கணக்கெடுப்புப் பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.