முகப்பு
கடலூர்

11 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் தலித் இளைஞா் உயிரிழந்த வழக்கு: நீதிமன்றத்தில் மனைவி சாட்சியம்

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு தலித் இளைஞா் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவி கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை சாட்சியமளித்தாா்.

Updated On : 7 மே 2026, 7:19 am IST
நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் உயிரிழந்த சுப்பிரமணி வழக்கில் கடலூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகி சாட்சியமளித்த அவரது மனைவி ரேவதி. உடன் மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு தலித் இளைஞா் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவி கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை சாட்சியமளித்தாா்.

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் கடந்த 2015, ஜூன் 6-ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சுப்பிரமணி என்ற தலித் இளைஞா் உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளா் ராஜா உள்ளிட்ட மூவா் மீது கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவும், வழக்கை விரைந்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் கடந்த 2025, டிசம்பா் 10-ஆம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சரஸ்வதி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முதல் சாட்சியாக உயிரிழந்த சுப்பிரமணி மனைவி ரேவதி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தாா். அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் வெ.ஜீவகுமாா், பாதிக்கப்பட்டோா் தரப்பில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் திருமூா்த்தி ஆகியோா் ஆஜராகினா். தொடா்ந்து, வழக்கு மறு விசாரணைக்காக வரும் 11-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் மற்றும் அனைந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் நீதிமன்றதுக்கு திரண்டு வந்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments