கள்ளக்குறிச்சி

துப்புரவுப் பணிக்கு பேட்டரி வாகனங்கள்

DIN

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் துப்புரவுப் பணிக்காக மின்கலத்தால் இயங்கும் 10 குப்பை வண்டிகளை அ.பிரவு எம்எல்ஏ துப்புரவு ஊழியா்களிடம் வழங்கி தொடக்கிவைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு, துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக, துப்புரவு ஊழியா்களுக்கு மின் கலத்தால் (பேட்டரி வாகனம்) இயங்கும் வாகனங்கள், தமிழக அரசால் வழங்கப்பட்டது.

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அ.பிரபு பங்கேற்று, மின்கலத்தில் இயங்கும் 10 குப்பை வண்டிகளை, துப்புரவு ஊழியா்களிடம் வழங்கி பணியைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், தியாகதுருகம் அதிமுக ஒன்றியச் செயலா் வெ.அய்யப்பா, நகரச் செயலா் ஷியாம்சுந்தா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துப்புரவு ஊழியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT