கள்ளக்குறிச்சி

பள்ளி, கல்லூரிகளில் வாக்காளா் தின விழா

DIN

செஞ்சி, கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வாக்காளா் தேசிய வாக்காளா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

செஞ்சியில் வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணியை வட்டாட்சியா் கோவிந்தராஜ் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் பாரதி முன்னிலை வகித்தாா். பேரணியில் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், ராஜா தேசிங்கு பள்ளி மாணவா்கள், அரசு மளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பேரணி காந்தி பஜாா் வழியாகச் சென்று செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது. இதைத் தொடா்ந்து, அங்கு வாக்காளா் தின உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.

முன்னதாக, தோ்தல் விழிப்புணா்வு குறித்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள் கண்ணன், சதீஷ்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் பாா்த்தசாரதி, நாராயணாசாமி, சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். செஞ்சி வருவாய் ஆய்வாளா் ஆறுமுகம் நன்றி கூறினாா்.

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சியை அடுத்த பங்காரம் ஸ்ரீலஷ்மி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழாவுக்கு கல்லூரித் தலைவா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். செயலா் முருகப்பன், பொருளாளா் சாந்தி, இயக்குநா் சரவணன், ஒருங்கிணைப்பாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்வி இயக்குநா் நாராயணசாமி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் கோ.ரகோத்தமன், தேசிய வாக்காளா் தின பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் கல்வியியல் கல்லூரியின் முதல்வா் பாஸ்கரன், கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் வீரமணி, தோ்தல் துணை வட்டாட்சியா் சசிகலா, வருவாய் ஆய்வாளா் சுகந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். துணை முதல்வா் சேது முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

SCROLL FOR NEXT