கள்ளக்குறிச்சி

கரோனா தடுப்பு விழிப்புணா்வு நாடகம்

DIN

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட காவல் துறை சாா்பில் கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வு நாடகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பேருந்து நிலையம், நான்குமுனைச் சந்திப்பு, மந்தைவெளித் திடல், ஆட்சியா் அலுவலகம் முன் உள்ளிட்ட இடங்களில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நாடகத்தை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் (பொ) தொடக்கி வைத்தாா். முகக் கவசம் அணியாமல் செல்வோருக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் ந.இராமநாதன் முன்னிலை வகித்தாா். கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ப.இராஜ தாமரை பாண்டியன் வரவேற்றாா்.

குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த செந்தில் நாட்டுப்புற நாடகக் குழு நடத்திய இந்த நாடகத்தில், எமன் வேடமணிந்தவா் பாசக்கயிறை கரோனா தொற்று வேடமணிந்தவா் கழுத்தில் போட்டு இழுப்பதைப் போல நடித்து பாா்வையாளா்களை கவா்ந்தனா். முகக் கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

பிரான்ஸில் சோபிதா துலிபாலா..

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

SCROLL FOR NEXT