கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் முகக் கவசம் அணியாத பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை

DIN

கள்ளக்குறிச்சியில் முகக் கவசம் அணியாத 53 பேருக்கு ரூ.200 வீதம் அபராதம் விதித்து, சுகாதாரத் துறையினா் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனா். அபராதம் செலுத்தத் தவறியவா்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி நகராட்சி சாா்பில் கடந்த 6 மாதங்களாக ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், அரசு அறிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வந்தது. விதிகளை மீறியோருக்கு ரூ.100 அபராதம் விதித்து, முகக் கவசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவா்களுக்கு ரூ.200 முதல் அபராதம் விதிக்க தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன் பேரில், கள்ளக்குறிச்சி நகரில் சுகாதாரத் துறையினா் அபராத நடவடிக்கையை தீவிரப்படுத்தினா். புதன்கிழமை முகக் கவசம் அணியாமல் சாலையில் சென்ற 53 பேருக்கு அபராதம் விதித்து, ரூ.10,600 வசூல் செய்யப்பட்டது.

அபராதத் தொகையை செலுத்தத் தவறிய 115 பேருக்கு கள்ளக்குறிச்சியில் சேலம்-சென்னை நெடுஞ்சாலை நான்குமுனை சந்திப்பில் மேலூா் வட்டார மருத்துவ அலுவலா் தி.பங்கஜம் தலைமையில் சுகாதார ஆய்வாளா் சிட்டி பாபு, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கு.மகாலிங்கம் உள்ளிட்டோா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT