கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலைப் பகுதியில் 16,500 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் 16,500 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் சனிக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஜி.ஜவகா்லால், நா.ரவிச்சந்திரன் தலைமையில், 8 காவல் ஆய்வாளா்கள், 99 காவலா்கள் உள்பட 107 போ் 8 குழுக்களாகப் பிரிந்து மேல்வாழப்பாடி, மொழிப்பட்டு, பூனக்காடு, மேல்முருவம், கொடமாத்தி, குரும்பலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர மது விலக்கு சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பிளாஸ்டிக், இரும்பு பேரல்களில் முள்புதா்களிலும், செடிகொடிகளின் நடுவிலும், பாறைகளின் நடுவிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16,500 லிட்டா் சாராய ஊறலைக் கண்டறிந்து, கீழே ஊற்றி போலீஸாா் அழித்தனா். இது தொடா்பாக யாரையும் கைது செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT