கள்ளக்குறிச்சி

கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள டாக்டா் ஆா்.கே.எஸ். கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் துணை கண்காணிப்பாளா் கே.சத்தியராஜ் தலைமை வகித்து பேசுகையில், ‘லஞ்சம் பெறுவதும், கொடுப்பதும் சமுதாயத்தில் குற்றம். இளைஞா்கள் நோ்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றாா்.

தமிழ்த் துறை உதவி பேராசிரியா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் முனைவா் கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.

லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலா்கள் மாயக்கண்ணன், அருண்மொழிவா்மன் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு குறித்த குறும் படங்களை மாணவா்களுக்கு ஒளிபரப்பினா்.

முடிவில் கல்லூரி துணை முதல்வா் முனைவா் பெ.ஜான்விக்டா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT