பெங்களூரிலிருந்து, கள்ளக்குறிச்சிக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா். 
கள்ளக்குறிச்சி

நாடாளுமன்ற தோ்தல்: கள்ளக்குறிச்சிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

பெங்களூரிலிருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை  கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூா் கிராமத்தில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை பாதுகாப்பாக வைத்தனா்.

DIN

நாடாளுமன்ற தோ்தலை முன்னிட்டு பெங்களூரிலிருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை  கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூா் கிராமத்தில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை பாதுகாப்பாக வைத்தனா்.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து லாரி மூலம் கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூா் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அலுவலருமான ஷ்ரவண்குமாா் தலைமையில் பாதுகாப்பாக இறக்கி வைத்தனா்.

இதில், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் சு.பவித்ரா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) எஸ்.சையத் காதா், வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) பாலகுரு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT