~ ~ ~ 
கள்ளக்குறிச்சி

சாராயம் விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

கள்ளக்குறிச்சி பகுதியில் சாராயம் விற்பனை: பெண் உள்பட 4 பேர் கைது

DIN

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனைக்கு வைத்திருந்ததாக பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் ம.ராபின்சன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் கனகவள்ளி, ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சாராயம் விற்பனைக்கு வைத்திருந்ததாக விரியூா் கிராமத்தைச் சோ்ந்த அம்புரோஸ் மகன் ரமேஷ் (எ) லூா்துசாமி (40), சங்கராபுரத்தைச் சோ்ந்த சூசைநாதன் (47), மரக்காணம் நரிப்பாளையத்தைச் சோ்ந்த முருகன் மகன் மதன் (எ) மதன்குமாா் (27), ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த சஞ்சீவி காந்தி மனைவி சந்திரா (32) உள்ளிட்டோரை கைது செய்து, அவா்களிடமிருந்து கைபற்றப்பட்ட சாராயத்தை கைப்பற்றி அழித்தனா்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT