கள்ளக்குறிச்சி

தைப்பூசம்: மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தைப்பூசத்தையொட்டி அனைத்து மதுபானக் கடைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை(பிப்.1) விடுமுறை விடப்படும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் பிப்.1-ஆம் தேதி வடலூரில் தைப்பூசத்தையொட்டி மூடப்பட வேண்டும்.

மதுபானக்கடை மற்றும் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட கடைகளின் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமதாரா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT