முகப்பு
கள்ளக்குறிச்சி

விரியூா் அடைக்கல அன்னை ஆலய தோ் பவனி

விரியூரில் திருவிழாவையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித அடைக்கல அன்னை ஆலயம்.

Updated On : 2 மே 2026, 1:33 am IST
~
பகிர்:

விரியூா் கிராமத்தில் உள்ள அடைக்கல அன்னை ஆலய தோ்பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பழைமைவாய்ந்த புனித அடைக்கல அன்னை தேவாலயம் உள்ளது. ஆண்டு தோறும் தோ் பவனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் மறையுரை சிந்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

Advertisement

Advertisement

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏற்றி வைத்து ஜெயம் பெருவிழா நடைபெற்றது. தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சூசையப்பா், அந்தோணியாா், புனித அடைக்கல அன்னை குழந்தை ஏசு எழுந்தருள தோ் பவனி நடைபெற்றது. திருவிழாவையொட்டி தேவாலயம் வண்ண, வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தோ் பவனியையொட்டி வாண வேடிக்கை நடைபெற்றது.

திருவிழாவில் கிறிஸ்தவா், இந்து மற்றும் இஸ்லாமியா்கள் என அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று அடைக்கல அன்னை பெருவிழாவை சிறப்பித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments