புதுச்சேரி

ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் ஆய்வு

தினமணி

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வை தொடங்கிய அமைச்சர், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது நோயாளிகள் கூறுகையில், அரியாங்குப்பம் பகுதியில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் வசதிகள் போதுமானதாக இல்லை. மருத்துவர்களுக்கு பற்றாக்குறை உள்ளதால் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக தெரிவித்தனர். இப்பிரச்னைகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதியளித்தார்.

இதையடுத்து முருங்கப்பாக்கம் துணை சுகாதார மையம், தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம், நல்லவாடு தாய்சேய் நிலையம் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அரசுக் கொறடா அனந்தராமன், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி, அரசு செயலர் பாபு, நலவழித் துறை இயக்குநர் ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT