புதுச்சேரி

பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

தினமணி

திருக்கனூர் பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தில் இருந்து விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
 புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை மூலம், திருக்கனூர் முத்து மாரியம்மன் கோயில் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையம் சேதமடைந்ததைத் தொடர்ந்து அதனை அகற்றாமல் அதன் அருகே 2008-ஆம் ஆண்டு புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. இதனிடையே, சேதமடைந்த பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் 8 ஆண்டுகளுக்கு மேலாகியும், அகற்றப்படாமல் உள்ளதால் கட்டடத்தை சுற்றிலும் புதர் மண்டி உள்ளது.
 இதனால் அந்தப் பகுதியில் இருந்து தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
 எனவே, ஆரம்ப சுகாதார நிலைய பழைய மருத்துவமனை கட்டடத்தை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT